Tuesday 28 June 2016

தொடக்க , நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் மாதவாரியாகப் பள்ளி வேலை நாட்கள் விவ‌ரம் வெளியீடு - 2016-2017

EMIS ENTRY: செய்முறை விளக்கம்

கல்வி துறையில் EMIS Entry செய்தல் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இது மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு செயல்பட்டு வருகிறது.

1)   மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்.

2) மாணவர்களின் விவரங்களை UPDATEசெய்தல், மற்றும் TRANSFERசெய்தல்(Common pool க்கு மாற்றுதல்).

3) Common pool (student pool)ல் உள்ள மாணவர்களின் விவரங்களை தங்களின்        பள்ளிக்கு மாற்றுதல்

மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்:-

Teacher attendance register Write the name Advice:

  • Teacher attendance register Write the name  Advice CEO DSE Click Here
  • Teacher attendance register Write the name  Advice DEEO DEE Click Here

ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்

1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்., 
பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. பணி நியமன முழு விபரம்.

3. பணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம்.


4. தகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட விபரம். 

5. GPF/TPF/CPS எண் விபரம்.

6. NHIS / SPF 1/SPF2 பிடித்தம் தொடங்கப்பட்ட / முடிக்கப்பட்ட விபரம்.

7. ஒவ்வொரு ஆண்டும் பணி சரிபார்ப்பு செய்யப்பட்ட விபரம் (Service Verification).

8. ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட விபரம் .

9. மருத்துவ விடுப்பு / ஈட்டிய விடுப்பு / அரைச்சம்பள விடுப்பு / ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகள் எடுக்கப்பட்ட விபரம்.

10. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யப்பட்டவிபரம் (15 /30 நாட்கள்).

11. உயர்கல்வி படிக்க முனு அனுமதி / பின் ஏற்பு அளிக்கப்பட்ட விபரம்.

12. உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விபரம்.

13. சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறப்பட்ட விபரம்.

14. ஊக்க ஊதியம் வழங்கப்பட்டதற்கான முழுமையான ஆணை விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்.

15. தேர்வுநிலை / சிறப்பு நிலை வழங்கப்பட்ட விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்

16. ஊதியத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அது பற்றிய முழு விபரம். எடுத்துக்காட்டாக தர ஊதியம் ரூ.2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூ.750மற்றும் 4300 தர ஊதியம் பெறுவோருக்கு சிறப்பு படி ரூ.500 வழங்கப்படும் விபரம்.

17. பதவி உயர்வு பெறும்போது தொடர்புடைய ஆணை பதிவு, புதிய பதவி பணி வரன் முறை செய்யப்பட்ட விபரம், 22B சான்று பெறப்பட்ட விபரம், பதவி உயர்வு ஊதிய நிர்ணய விபரம்.

18. பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயம் செய்யப்படும் தேதி குறித்து தனியரின் விருப்பம் ஏதேனும் இருந்தால் அது பற்றிய பதிவு.

19. ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் முழு விபரம் மற்றும் தனியரின் விருப்பம் (option)குறித்த பதிவு. 

20. வாரிசுதாரராக யாரை நியமனம் செய்திருக்கிறோம் என்பது பற்றிய விபரம்.

21. பொது மாறுதல்களில் வந்த விபரம்.

2016 -17 கல்வியாண்டு வேலை நாட்கள் விவரம்...

2016 -17 கல்வியாண்டு வேலை நாட்கள் விவரம்... (Maybe)

2015-16 GPF ONLINE ACCOUNT SLIP PUBLISHED

குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர புது ஆப்ஸ்

மற்றும் ஒளி வடிவில் ஆரம்பநிலை பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கற்றுத்தர புதிய ஆப்ஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை சரியாக அடையாளம் காணவும், அவற்றை சரியாக உச்சரிக்கவும் இந்த ஆப்ஸ் உதவ உள்ளது.
247 தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் மற்றும் அவற்றை உச்சரிக்கும் ஆடியோக்களுடன் இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் போனின் ஸ்க்ரீனிலேயே எழுத்துக்களை அழிக்கவும், சரியாக எழுதவும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக இந்திய கல்வித்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் பக்தாச்சலம் கூறுகையில், தமிழகத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் 40 சதவீதம் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை சரியாக கண்டறிய தெரியாதவர்களாகவும், அவற்றை சரியாக உச்சரிக்க தெரியாதவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

Monday 20 June 2016

CCE : Physical Education Lessons (I – V)


ஆரம்ப நிலை (1-5) மாணவர்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் கல்விச் செயல்பாடுகளுல் ஒன்றான,
உடற்கல்வி-யின் வகுப்புவாரி பாடங்களின் தொகுப்பினை (154 பக்கங்கள்)
கீழ்க்காணும் இணைப்பில் PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CCE : Co-Scholastic Module


தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் கல்வி இணைச் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கான ஆசிரியர் கையேடும்,
காலை வழிபாட்டு முறைமையைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளும் அடங்கிய கட்டகத்தினை (89 பக்கங்கள்)
கீழ்க்காணும் இணைப்பில் PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ்ச் சொற்கள்


ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் எழுத்துகளைத் தனித்தனியே அடையாளம் கண்டு கொள்ள ஏற்றவகையில், தனித்தனி வண்ணங்களில் அமைந்த எழுத்துகளைக் கொண்டு சொற்களை வாசிப்பதற்காக,
6′ X 4′ (அடி) அளவில் JPEG கோப்பாக இங்கு பகிரப்பட்டுள்ளது.
இதனைத் தரவிறக்கம் செய்து வண்ணப் பதாகையாக வன்னகல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Sorkal_6X4

English : Dictation Words


1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்காள  உணவு இடைவேளைக்குப் பின்னர் பிற்பகல் 1:30-1:50 வரையிலான செயல்பாடான, ஆங்கிலப் பாடத்தில் சொல்வது எழுதல் செயல்பாட்டிற்கான வகுப்பு  வாாியான சொற்கள் இங்கு பகிரப்பட்டுள்ளது.

தமிழ் : சொல்வது எழுதுதல்


1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்காள  உணவு இடைவேளைக்குப் பின்னர் பிற்பகல் 1:30-1:50 வரையிலான செயல்பாடான தமிழ் பாடத்தில் சொல்வது எழுதல் செயல்பாட்டிற்கான வகுப்பு  வாாியான சொற்கள் இங்கு பகிரப்பட்டுள்ளது.

தமிழ் : எழுத்து – சொல்

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான, தமிழ் எழுத்துகள் மற்றும் சொற்களின் அறிமுகம் பருவ வாாியாக 3 பருவங்களுக்கும் இங்கு பகிரப்பட்டுள்ளது.

ABL Logo Sticker

செயல்வழிக் கற்றல் முறையில் உள்ள செயல்பாடுகளுக்கான அட்டைகளின் இலச்சினைகள் 12″x18″ அளவில் பகிரப்பட்டுள்ளது.

வண்ண வன்னகல் (Colour Xerox) அங்காடிகளில் இதனைக் கொண்டு ஒட்டிகளாக (Sticker) அச்சிட்டுக்கொள்ளலாம்.

Time Table & Prayer Schedule


     1. பாட நேர மாதிரி அட்டவணை
     2. காலை வழிபாட்டு முறைமை
மற்றும், காலை வழிபாட்டினைத் தொடர்ந்து நாள் தோறும் வகுப்பறையில் மாணவர்கள் வாசித்து அறிய வேண்டிய சில அடிப்படைத் தகவல்கள் அடங்கிய,
     3. வாசிப்போம் வகுப்பறையில்
எனும் தகவல் பெட்டகமும் இத்துடன் பகிரப்பட்டுள்ளது.
இம்மூன்று பகிர்வுகளுமே எமது முயற்சியால் தொகுத்து வடிவமைத்து வழங்கப்பட்டுள்ளதே அன்றி, இவற்றை அனைவரும் பயன்படுத்திட எவ்வித அலுவல் தொடர்பான கட்டாயமும் இல்லை.
“வாசிப்போம் வகுப்பறையில்” ஒரே A4 தாளில் முன்-பின் பக்கங்களில் அச்சிடும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

CCE-ல் 4 பதிவேடுகள் மட்டுமே

தொடர் & முழுமையான மதிப்பீட்டு முறைக்காகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறையால் உறுதியாக இறுதி செய்யப்பட்டவை 4 பதிவேடுகள் மட்டுமே.

1. *மாணவர் திரள் பதிவேடு*
2. *பாட ஆசிரியர் பதிவேடு*
3. *கல்வியிணைச் செயல்பாடுகள் பதிவேடு*
4. *வகுப்பு ஆசிரியர் (தொகுப்பு மதிப்பெண்) பதிவேடு*
இதில், மாணவர் திரள் பதிவேடு என்பது தனித்த அட்டைகள் ஆகும். இதுவே பழைய முறையின்படியான மதிப்பெண் அட்டை (Rank Card). இதை ஒவ்வொரு பருவ முடிவிலும் பெற்றோரின் பார்வைக்குக் கொடுத்தனுப்பி கையொப்பம் பெற்று வைத்துக் கொள்ளவும். பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றுச் செல்லும் மாணவரிடம் மாற்றுச் சான்றிதழுடன் இதன் நகலையும் வழங்கிட வேண்டும்.
*I Can! I Did! பதிவேடு* மாணவர்களுக்கானது. அவர்களின் பாடப் புத்தகங்களிலேயே இதற்கான படிவம் தரப்பட்டுவிட்டது.
இதைவிடுத்து, அச்சக உரிமையாளரும், பதிவேடுகள் விற்பனையாளரும் இலாப நோக்கில் விற்பனை செய்யும் வீணான பதிவேடுகளை வாங்கிக் குவிப்பதை ஆசிரியப் பெருமக்கள் இனியாயினும் தவிர்த்திடவும்.
இந்நான்கு பதிவேடுகளின் மாதிரி இத்துடன் பகிரப்பட்டுள்ளது.

1 To 5 வகுப்பிற்கான முதல் பருவ பாடத்திட்டம்

பள்ளிக்கல்வி - 2015-16ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு

மாநில நல்லாசிரியர் விருது - படிவம் 2015-16

Manonmaniam Sundaranar University B.Ed (DD&CE) Over all Merit List -

6,7,8-ஆம் வகுப்பு வாராந்திர பாடத்திட்டம்

SCERT given new period Allocation...

ENGLISH : Dictation Words 1 to 5 Std

Monday 13 June 2016

2015 - 16 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீடு பட்டியல்....

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர் மாணவர் விகிதம்

அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு.

தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் பள்ளி அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பதை, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரக இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். அங்கீகாரம் பெற்ற மெடரிக் மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியலை மாவட்ட வாரியமாக இந்த இணைய தளத்தில் பார்க்கலாம்.

அரசுப் பள்ளிகளில் மாதம் ஒரு முறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு: இணை இயக்குநர் அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தவேண்டும்என பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்குப்புசாமி அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்வுகளில் 90 சதவீதத்துக்கும் கீழ் தேர்ச்சி சதவீதம்குறைந்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆய்வுக்

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 (NHIS 2016) அறிமுகம் - அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் தொடக்கப்பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி நடந்து யாராவது பாத்திருக்கீங்களா? அட்மிஷனுக்காக அலைமோதும் கூட்டம்!

காலை ஐந்து மணியிலிருந்து லைன்ல குடும்பத்தோட வந்து தேவுடு காத்து நின்னாலும், பியூனிலிருந்து பிரின்சிபல் வரை சரிக்கட்டி வச்சாலும், பல லட்சங்களை அப்டி..யே அள்ளிக்கொடுக்கத் தயாரா இருந்தாலும், 'ரெக்கமண்டேஷன் எதும் இருக்கா...?' னு கேட்பாங்க. எதுக்கு...?மூணு வயசு குழந்தைய ‘இன்டெர்நேஷனல்’ ஸ்கூலில் எல்.கே.ஜி சேர்க்க. ஆனா எங்கேயாவது அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி நடந்து யாராவது பாத்திருக்கீங்களா? ஒரு கிராமத்தின் அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்கு மக்கள் அலைமோதிய கண்கொள்ளாக் காட்சி நடந்தேறிய இடம், மதுரை யானைமலை ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. 

G.O.165 Dt:01.06.16 MEDICAL AID – NHIS 2014 for Pensioners (including spouse) /Family Pensioners – List of Addl Hospitals covered under this scheme and Addl Specialties included inthe Hospitals already empanelled under this Scheme – Approved

SSA:2016-17 கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள CRC & BRC பயிற்சிக்கான நாட்கள் மற்றும் தலைப்புகள் வெளியீடு.

Sunday 5 June 2016

ICT AWARD 2016 - APPLICATION FORM

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் அளித்தால் நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

தமிழகத்தில், தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. ஆனால் இதுவரை இந்த ஆண்டுக்கானகல்விக் கட்டணம் பற்றி கல்விக் கட்டண சீரமைப்புக் குழுவிடம் இருந்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

இதனை பயன்படுத்திக் கொண்டு, பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.வசூலிக்கும் கட்டணத்திற்கு உரிய ரசீதுகள் வழங்கப்படுவதில்லை என்றும்  கூறப்படுகிறது.

இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநருக்கு எழுத்துபூர்வமாக புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தனர். அதன் பேரில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர்கள் கூறினார்.

FA(A) செயல்பாடுகள் என்னென்ன ?

கோவை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

New Health Insurance Scheme -மருத்தவமனைகள் பட்டியல் சேர்த்து/நீக்கி ஆணை வெளியீடு.

G.O.(Rt).No.421 Dt: May 24, 2016 New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and other Organisations – List of Approved Hospitals – Addition of new hospitals, Deletion of existing hospitals, Deletion of procedures of existing hospital and change of name of existing hospitals based on the recommendations of the Accreditation Committee - Notified- Orders issued.

1st std to 8th std -CCE FIRST TERM WEEKLY SYLLABUS

GO 264 ன்படி பள்ளி நடைமுறைகளுக்கான கால அட்டவணை.