Thursday 20 August 2015

உபரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இணையாக புதிய தொடக்க,உயர்நிலைப் பள்ளிகளை அரசு உருவாக்கலாமே...

ஒவ்வோர் ஆண்டும் தொடக்கக் கல்வித் துறையில்-இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் , பள்ளிக் கல்வித் துறையில் - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உபரியாக ஏற்படுகின்றன. 

உபரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இணையாக புதியதொடக்க, உயர்நிலைப்பள்ளிகள்  உருவாக்கலாம்.

ஒரு ஒன்றியத்தில் 2 இடைநிலை ஆசிரியர் பணியிடம் உபரியாக இருந்தால், 

அந்த ஒன்றியத்தில் பள்ளி தேவை உள்ள பகுதியில், 
1 தொடக்கப் பள்ளியை அரசு உருவாக்கலாம்... 🌻

ஒரு மாவட்டத்தில் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 
உபரியாக இருந்தால் , 
அந்த மாவட்டத்தில் , பள்ளி தேவை உள்ள பகுதியில், 
1 உயர்நிலைப் பள்ளியை அரசு உருவாக்கலாம்... 

 இவ்வாறு உபரிப் பணியிடங்களுக்கு இணையாக,
புதிய தொடக்க,உயர்நிலைப் பள்ளிகளை உருவாக்கினால், 
உபரிப் பணியிடங்கள் என்பதே 
இல்லாத நிலை உருவாகி விடும். 

புதிய பள்ளிகள் மூலம் மாணவர்களும் பயன்பெறுவர். 

No comments:

Post a Comment