ஆங்கில மொழித்துறை துவங்கஅனுமதி கோரும்கல்லூரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்துவரும்நிலையில், சொற்ப
அளவிலான கல்லூரிகளேதமிழ்த்துறை துவங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
பாரதியார் பல்கலையின் கீழ்கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடுமாவட்டங்களில், 108கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இக்கல்லூரிகளில், நூற்றுக்கும்மேற்பட்டபட்டப்டிப்புகள்பயிற்றுவிக்கபபடுகின்றன. அரசு கலைக்கல்லூரிகளில் மட்டுமே, தமிழ்,ஆங்கிலம் ஆகியமொழிப் பாடங்களுக்கும், பொருளாதாரம், கணிதம், வரலாறு, புவியியல்,இயற்பியல், வேதியியல் உள்ளிட்டகலை, அறிவியல்பாடங்களுக்கும் முக்கியத்துவம்தரப்படுகிறது.
அரசு உதவிபெறும்கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் பெரும்பாலும், பி.காம்., பி.காம்., (சி.ஏ.,), காட்சிதொடர்பியல், உயிர் வேதியியல் உள்ளிட்ட மவுசுஅதிகமுள்ளபாடங்களேஉள்ளன. சமீபகாலமாகஆங்கிலத் துறைதுவங்கவும் தனியார் கல்லூரிகள் ஆர்வம்காட்டிவருகின்றன; தமிழ் மீதான ஆர்வம், அந்தளவுக்குஇல்லை.நடப்பாண்டில், இருகல்லூரிகள்தமிழ் துறைதொடங்க அனுமதிவேண்டியும், மூன்று கல்லூரிகள் ஆங்கிலத்துறைதொடங்கஅனுமதி வேண்டியும்பாரதியார் பல்கலையிடம்விண்ணப்பித்துள்ளன.ப ல்கலைபதிவாளர்செந்திவாசன் கூறுகையில், ''ஆரம்பத்தில், 14 கல்லூரிகளில் தமிழ் துறை இருந்தது;சமீபத்தில்இரு கல்லூரிகள்இத்துறை துவங்கவிண்ணப்பித்துள்ளன.
அதேபோல், 67 கல்லூரிகளில் ஆங்கிலத்துறை இருந்தது; தற்போது, புதிதாகமூன்றுகல்லூரிகள்இத்துறை துவங்கஅனுமதி கோரியுள்ளன. மாணவர்களின் விருப்பங்களுக்கேற்பகல்லூரிகளும்புதிய பாடங்கள்துவங்க முன்வருகின்றன,'' என்றார்.தற்போதுதமிழ்பயிற்றுவிக்கப்படும், 14 கல்லூரிகளில், 720 மாணவர்கள்மட்டுமே இளங்கலைதமிழ்படிக்கின்றனர். ஆனால், ஆங்கிலம்பயிற்றுவிக்கப்படும், 67 கல்லூரிகளில், 4200 மாணவர்கள்இளங்கலை ஆங்கிலம் படிக்கின்றனர். கல்லூரி பட்டவகுப்பில் சேரும்மாணவர்களிடையே,தமிழ் மீதான ஆர்வம் குறைந்துவருவதையே, இதுகாட்டுகிறது.
No comments:
Post a Comment