Saturday 27 June 2015

நாளை .....! அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் கவுன்சலிங் துவக்கம்...

Dinamalar Banner Tamil News
தமிழகத்தில் உள்ள, 539 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்காக, சென்னை அண்ணா பல்கலையால் நடத்தப்படும் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தனியார் கல்லுாரிகள் ஆள் பிடிப்பதை தடுக்க, இடைத்தரகர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்கள் குளிக்கவும் தனி வசதி செய்யப்பட்டுள்ளது.
*மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோரிடம் ஆசை வார்த்தை கூறி, தனியார் கல்லுாரிகளை தேர்வு செய்ய வைக்கும் இடைத்தரகர்கள், உள்ளே வர தடை விதிக்கப் பட்டுள்ளது.
*அண்ணா பல்கலை ஊழியர்கள் அல்லது மாணவர்களின் உறவினர் போல் நடித்து, மாணவர்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அவர்கள் மீது பெற்றோர் புகார் கொடுக்கலாம்; அதையடுத்து, இடைத்தரகர்களைமோசடி வழக்கில் கைது செய்யலாம் என, போலீசுக்கு, அண்ணா பல்கலை பரிந்துரை செய்துள்ளது
.* கவுன்சிலிங் வளாகத்தில், ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில், பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
* குடிநீர், முதலுதவி, தீயணைப்பு மற்றும் மீட்பு, காவல் உதவி.*பல்கலை வளாகத்தில், தனியார் கல்லுாரிகளின் துண்டு பிரசுரங்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
*வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு, அசல் அழைப்பு கடிதம் கொண்டு வந்தால்,மாணவருக்கும், அவருடன் வந்து செல்லும் ஒருவருக்கும், அரசு பேருந்தில், 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும்.
*வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் குளிக்க, குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது.
* கவுன்சிலிங் அழைப்பு கடிதம் தபாலில் கிடைக்காதவர்கள், மூன்று மணி நேரத்திற்கு முன் வந்து, அண்ணா பல்கலையில் கடித நகல் பெற்றுக் கொள்ளலாம்.
* கவுன்சிலிங் அரங்கின் உள்ளே வங்கிகளின் சார்பில், எட்டு சிறப்புக் கவுன்டர்கள் உள்ளன.
* மாணவர்கள், மூன்று வகை கல்லுாரிகள் மற்றும் விருப்ப பாடங்களை பதிவு செய்யலாம். இதற்காக, 50 பேர், ஒரே நேரத்தில் பதிவு செய்ய, 50 கணினிகள் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment