பிளஸ் 2 முடிவு வெளியானதும், இன்ஜி., துறையில் கால்பதிக்க நினைக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் பெற்றோருக்கும் இருக்கும், ஒரே தலைவலி 'கவுன்சிலிங்'.'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு ஏற்ப, எந்த கோர்ஸ், எந்த காலேஜில் கிடைக்கும் என்பதை அறியவே, ஒரு மாதமாகிவிடும்.
ஆனால், கோவையை சேர்ந்த பிளஸ் 2மாணவி, இதை ஒரு சில நொடிகளிலே தெரிவிக்கும் புதிய, 'ஸ்மார்ட்போன்' அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளார்.வித்யா நிகேதன் பள்ளி மாணவியான பியோனா விக்டோரியா, பிளஸ் 2 முடித்து, தற்போதுஇன்ஜி., கவுன்சிலிங்குக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்பா ஸ்டான்லி, அம்மாநிர்மலா, இருவரும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.தனது எட்டாம் வகுப்பு முதலே, புரோகிராமிங் குறித்த கோடை சிறப்பு வகுப்புக்கு சென்றுவரும் இவர், இந்த அப்ளிகேஷனை, மூன்று மணி நேரத்திலேயே, டிசைன் செய்து அசத்தியுள்ளார்.'தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலர்'(TNEA COUNSELLOR)எனும் இந்த மொபைல் அப்ளிகேஷன், கட் ஆப் கால்குலேட்டர், கவுன்சிலர் தேர்வு, விருப்ப தேர்வு போன்ற பயன்பாடுகளுடன்வடிவமைக்கப்பட்டு
'கூகுள் பிளே ஸ்டோர்' வாயிலாக, இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம். மாணவி பியோனா விக்டோரியா கூறுகையில், ''சிறு வயதிலிருந்தே, 'சி புரோகிராமிங்' கற்பதில் ஆர்வம் அதிகம். பிளஸ் 2 தேர்வை எழுதி முடித்ததும்இந்த யோசனை வந்தது. ஆன்லைனில், எல்லா தகவலையும் சேகரித்தேன். வெறும் மூன்று மணி நேரத்தில், இந்த அப்ளிகேஷனை டிசைன் செய்து முடித்தேன்.''தேர்வு முடிவு வந்ததும், கட் ஆப் மதிப்பெண்ணுக்கு இன்ஜி., சீட் கிடைக்குமா என கவுன்சிலிங் வாயிலாக தெரியவே, எப்படியும் ஒரு மாதம் ஆகும். இந்த ஆப்ஸ், இதை முன்கூட்டியே சொல்லிவிடுவதால், பயனுள்ளதாக இருக்கும். கடந்த இரு வாரத்தில், ஆயிரக்கணக்கானோர், 'டவுண்லோடு' செய்துள்ளனர்,'' என, மகிழ்ச்சியுடன் கூறும், பியோனா விக்டோரியாவுக்கு எதிர்காலத்தில், சாப்ட்வேர் இன்ஜியரிங் துறையில் வெற்றிக்கொடி நாட்ட ஆசை! வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment