நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் ஊதிய உயர்வு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களுடன் அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திவந்தது.இதில் உடன்பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து வங்கி ஊழியர் ஒப்பந்தம் மும்பையில் இன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்ததில் இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்ததின் படி 1.11.2012 முதல் கணக்கிட்டு 15 சதவிகித ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு செய்யயப்பட்டுள்ளது.ஊதிய உயர்வால் 43 வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்கள் பயன்பெறுவர். இந்த ஊதிய உயர்வால் வங்கிகளுக்கு 4,725 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
No comments:
Post a Comment