Wednesday, 20 May 2015

மனவளர்ச்சி குன்றிய பெண்கள் மறுவாழ்வு மையத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய மறுவாழ்வு இல்லத்தில் சேருவதற்கு மனவளர்ச்சி குன்றிய பெண்களின் பெற்றோர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் வே.ராஜாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:இம்மாவட்டத்தில் 14 வயதிற்குள்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான தங்கும் விடுதி வசதியுடன் மறுவாழ்வு இல்லம் மாற்றுத்திறனாளி நலத்துறை நிதி
உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் குல்லூர்சந்தையில் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, அவர்களின் தகுதிகேற்ப தொழிற்பயிற்சியும், மருத்துவ சிகிச்சை மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

அதனால், 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் புகைப்படம் ஆகிய விவரங்களுடன் முழு வெள்ளைத்தாளில் விண்ணப்பம் எழுதி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகம், ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு வருகிற 25-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேலும், இந்த அலுவலக 04562-252068 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

No comments:

Post a Comment