பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 41 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.
அதே சமயத்தில், தமிழை ஒரு மொழிப்பாடமாக மட்டுமில்லாமல், ஆங்கிலம் தவிர்த்த மற்ற அனைத்து பாடங்களையும் தமிழ்வழியிலேயே படித்ததில் 23 மாணவ-மாணவிகள் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர்.
அரியலூர் மாணவர் முதலிடம்
அரியலூர் மாவட்டம் பரனம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சார்ந்த எஸ்.பாரதிராஜா 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ள 7 பேர் பட்டியல்:
ஜி.கிருஷ்ணம்மாள், பிஏசிஆர் அம்மனி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.
எஸ்.ஜெயஸ்ரீ, அண்ணாமலையார் மில்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாகல் நகர், திண்டுக்கல்.
எஸ்.சுவாதி, அரசு உயர்நிலைப்பள்ளி, பிச்சம்பாளையம்புதூர், திருப்பூர்.
எம்.சுரேஷ்குமார், ராயர் கல்வி நிலையம், அவினாசி, திருப்பூர்.
இ.காவியா, பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம்.
ஜி.ரஞ்சித், தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.
ஜி.கனிமொழி, ஏகேடி நினைவு உயர்நிலைப்பள்ளி, நீலாமங்கலம், கள்ளக்குறிச்சி.
497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ள 15 பேர் பட்டியல்:
ஏ.அமலா பிரதிக்சா, அனைத்து புனிதர்கள் மேல்நிலைப்பள்ளி, முட்டம், கன்னியாகுமரி.
வி.அருணாதேவி, எச்என்யுசி மேல்நிலைப்பள்ளி, டிஎன் புதுக்குடி, திருநெல்வேலி.
ஆர்.தரணி, கேஎன் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கமுதி, ராமநாதபுரம்.
எஸ்.திவ்யபாரதி, ஸ்ரீமீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி.
ஆர்.சுந்தர், நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.
எம்.செல்வகுமாரி, எஸ்ஆர்பிஏகேடிடி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.
ஆர்.ஜெயஸ்ரீ, புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்.
எஸ்.ஜோதிமணி, தேன்மலர் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம்,
திருப்பூர். எஸ்.தமிழரசு, அரசு மேல்நிலைப்பள்ளி, பாச்சல், நாமக்கல்.
எல்.பாலாஜி, அரசு மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம், தருமபுரி.
ஜி.வினோதாதேவி, பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம்.
எம்.கவிபாரதி, ராஜாவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர், பெரம்பலூர்.
எம்.மகேஸ்வரி, அரசு மேல்நிலைப்பள்ளி, தாமரங்கோட்டை, தஞ்சாவூர்.
என்.கவியரசன், லாரல் மேல்நிலைப்பள்ளி, பள்ளிகொண்டான், தஞ்சாவூர்.
ஏ.அபர்ணா, ஏகேடி நினைவு உயர்நிலைப்பள்ளி, நீலாமங்கலம், கள்ளக்குறிச்சி.
No comments:
Post a Comment