பிளஸ்-2 உடனடி சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 22-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. உடனடி சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 26-ந் தேதியும் தொடங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 7-ந் தேதி வெளியிடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு 21-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. உடனடி சிறப்பு துணைத்தேர்வு காலஅட்டவணையை வெளியிட்டுள்ளார்.
பிளஸ்-2 தேர்வு கால அட்டவணை இந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. உடனடி சிறப்பு துணைத்தேர்வு காலஅட்டவணையை வெளியிட்டுள்ளார்.
- ஜூன் 22-ந் தேதி தமிழ் முதல் தாள்
- 23-ந் தேதி தமிழ் 2-வது தாள்
- 24-ந் தேதி ஆங்கிலம் முதல் தாள்
- 25-ந் தேதி ஆங்கிலம் 2-வது தாள்
- 26-ந் தேதி இயற்பியல், பொருளாதாரம்
- 27-ந் தேதி கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நீயூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ்
- 29-ந் தேதி வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
- 30-ந் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி
- ஜூலை 1-ந் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்
- 2-ந் தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்
- 3-ந் தேதி அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழில்கல்வி தேர்வுகள்.
தேர்வுகள் காலை 10.15 மணி முதல் பகல் 1.15 வரை நடைபெற இருக்கின்றன.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை
- ஜூன் 26-ந் தேதி தமிழ் முதல்தாள்
- 27-ந் தேதி தமிழ் 2-வது தாள்
- 29-ந் தேதி ஆங்கிலம் முதல்தாள்
- 30-ந் தேதி ஆங்கிலம் 2-வது தாள்
- ஜூலை 1-ந் தேதி கணிதம்
- 2-ந் தேதி அறிவியல்
- 3-ந் தேதி சமூக அறிவியல்
தேர்வுகள் காலை 9.15 மணி முதல் பகல் 12.15 மணி வரை
இவ்வாறு கு.தேவராஜன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கு.தேவராஜன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment