ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் படித்து 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்கள், அவர்களது மாவட்டத்தில் உள்ளதனியார் பள்ளிகளில் அரசு உதவியுடன் கல்வி பயிலும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கையைத் தகர்த்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை குறித்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த 3 மாணவர்கள் , 3 மாணவியர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட ,சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 2 மாணவர்கள், 2 மாணவியர் ஆக மொத்தம் 10 பேரைத் தேர்வு செய்து, அவர்கள் விரும்பும் தமிழகத்திலுள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் 11-ம்வகுப்பில் மேல்நிலைக்கல்வி பெற ஏதுவாக அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் உதவிபெற விரும்பும் மாணவ, மாணவியரின் பெற்றோரது ஆண்டுவருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவருக்கு உயர்ந்த பட்சமாக ஆண்டுக்கு ரூ. 28 ஆயிரத்துக்கு மிகாமல் நிதியுதவி வழங்கப்படும்.
இது குறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பிற்படு
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வேண்டும் என்று தான் அரசு பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து `எலைட்’ போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களை, அரசே தனியார் சேர்த்தால், அரசு பள்ளிகளின் நிலையை அரசு புரிந்துள்ள விதத்தை என்னவென்று சொல்ல முடியும்? இந்த மாணவர்களுக்கு அரசு பள்ளிகளிலேயே வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து, தரமான கல்வியை வழங்கலாமே?”என்றார்.பிற்படுத்
No comments:
Post a Comment