போட்டித் திறனே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக உள்ளது என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறினார்.ராக்கெட், விண்கள உதிரி பாகங்களைத் தயாரிக்கும் வாலெத் நிறுவனக் குழுமத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அப்துல் கலாம்
பேசியது:போட்டிதான் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்த நாட்டின் போட்டியிடும் திறனைக் கொண்டே அமையும். இதற்கு எனது சொந்த அனுபவத்தை உதாரணமாகக் கூற முடியும்.
1981-இல் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் எஸ்.எல்.வி. 4-ஆம் நிலை ராக்கெட்டுக்கு எனது தலைமையிலான விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்திய இயந்திரத்தை பயன்படுத்துவதா அல்லது ஐரோப்பிய விஞ்ஞானிகள் உருவாக்கிய இயந்திரத்தை பயன்படுத்துவதா என்ற போட்டி எழுந்தது.
இரு நாட்டு விஞ்ஞானிகளும் உயரதிகாரிகளின் முடிவுக்காக காத்திருந்தபோது, இந்திய இயந்திரமே தேர்வு செய்யப்பட்டதாக வந்த அறிவிப்பு எங்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பிறகு, இந்திய இயந்திரத்தைப் பயன்படுத்தி அந்த "ஆப்பிள்' தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்தது.
தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில் போட்டி மேலும் அதிகரித்திருக்கிறது. நியாயமான விலையில், தரமான பொருளை உருவாக்குகிற நிறுவனங்கள் மட்டுமே இந்தப் போட்டி மிகுந்த உலகில் வெற்றி பெற முடியும்.
இதற்கு தலைசிறந்த, புதிய உத்திகளை கையாளக் கூடிய தலைமைப் பண்பு அவசியம். தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், அரசு நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றார்.

No comments:
Post a Comment