Tuesday, 19 May 2015

12TH ACHIEVEMENT STUDENT-அத்தையின் ஆதரவில் சாதித்த பிளஸ் 2 மாணவி: 1124 எடுத்தும் உயர்கல்விக்கு வழியில்லை!!

பெற்றோர் இன்றி அத்தையின் முதியோர் உதவித் தொகையில் படித்து பிளஸ் 2வில் பள்ளியில் முதல் இடம் (1124 மதிப்பெண்) பிடித்த திருப்புவனம் அரசுப்பள்ளி மாணவி தனலெட்சுமி, உயர்கல்விக்கு வழி இன்றி தவிக்கிறார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோட்டை பெருமாள் கோயில் வீதி செந்தமிழ்ச்செல்வி என்பவரின் தம்பி அனந்த ஈஸ்வரன்- தங்கம் மகள் தனலெட்சுமி, 17. இவர் பிறக்கும் போதே மஞ்சள் காமாலை
நோயால் அவரது தாயார் இறந்தார். சில மாதம் கழித்து அவரது தந்தையும் இறந்தார்.தனலெட்சுமியை அவரது அத்தை செந்தமிழ்ச்செல்வி, குழந்தையிலிருந்து வளர்த்து வருகிறார்.கணவனை இழந்த செந்தமிழ்ச் செல்வி, தனது 85 வயதான தந்தையை கவனித்து கொண்டு,அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகையில் ஜீவனம் நடத்தி வருகிறார்.
பெற்றோர் இல்லாத குறையின்றி வளர்ந்த தனலெட்சுமி, திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதி 1124 மதிப்பெண் (தமிழ்-193, ஆங்கிலம்-171, இயற்பியல்-192, வேதியியல்-183, கம்ப்யூட்டர் அறிவியல்- 190, கணிதம்- 195) பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். உயர்கல்வி படிப்பதற்கு வசதி இல்லை. நல்ல மதிப்பெண் பெற்றும் ஏழ்மை தடையாக இருப்பதால் பரிதவிக்கிறார்.
அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவி கிடைக்கும் பட்சத்தில் உயர் கல்வி கற்க விரும்புவதாக நம்பிக்கையுடன் தெரிவித்தார்.உதவி செய்ய விரும்புவோர் 99431 18209 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment