பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள்‘ சேமிப்பு திட்டத்துக்கு (சுகன்யா சம்ரிதி) 9.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2015–2016–ம் நிதி ஆண்டில், இத்திட்ட முதலீட்டுக்கான வட்டி விகிதம், 9.2 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
இது, இன்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது.அதுபோல், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம், 9.2 சதவீதத்தில் இருந்து 9.3 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. பொது வைப்பு நிதி வட்டி விகிதம் 8.7 சதவீதமாகவும், கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 8.7 சதவீதமாகவும் நீடிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment