Monday 25 May 2015

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்துக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, 10ம் வகுப்பு முடித்தோருக்கு, பிளஸ் 1 சேர்க்கையும், பிளஸ் 2 முடித்தோருக்கு, மருத்துவம், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன. மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்புகளில் சேர, இன்னும் நான்கு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான- சி.பி.எஸ்.இ., செயலர் ஜோசப் இமானுவேல் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பகல் 12:00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 27ல் வெளியாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment