Wednesday 20 May 2015

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அச்சமா? 104-ஐ அழைக்கலாம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த அச்சமோ, மன அழுத்தமோ ஏற்பட்டால் 104 தொலைபேசி சேவை எண்ணை அழைத்து ஆலோசனை பெறலாம்.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 21) வெளியாகின்றன. இந்நிலையில் தேர்வு தோல்வி குறித்த அச்சமோ, மன அழுத்தமோ, எதிர்காலம் குறித்து அச்சமோ ஏற்படும் மாணவர்கள் 104 சேவை எண்ணை அழைக்கலாம் என 104 சேவை நிறுவனம்
அறிவித்துள்ளது. இது குறித்து 104 தொலைபேசி சேவை அதிகாரிகள் கூறியது:
பிளஸ் 2 பொதுத் தேர்வு பயம், மன அழுத்தம் ஏற்படும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சிறப்பாக மன நல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. இதில் பணியாற்றுவதற்கு மொத்தம் 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மட்டுமன்றி பெற்றோர்கள், மாணவர்களின் உறவினர்கள் என அனைவரும் தொலைபேசியில் இந்த மையத்தில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த மாதம் இறுதி வரை மாணவர்களுக்கான இந்த ஆலோசனை மையம் செயல்படும். பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது சுமார் 8,000 அழைப்புகள், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான சமயம் சுமார் 10,000 அழைப்புகள் இந்த சேவைக்கு வந்தன என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment