Friday 10 April 2015

CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை

 CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை
PFRDA - CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15/01/2014 அன்று தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது நிபந்தனைகள்: 1) தேவைகள் a) குழந்தைகளின் மேல் படிப்பு செலவு b) குழந்தைகளின் திருமணம் c) வீடு கட்டுவதற்கு (ஏற்கனவே சொந்த வீடு வைத்துள்ளவர்கள் இது பொருந்தாது) d) கீழ் கண்ட ஏதாவது ஒரு மருத்துவ செலவு நமக்கோ அல்லது நமது
குடும்பத்தினர்க்கு (மனைவி அல்லது குழந்தை) ஏற்படும் பொழுது. 1. Cancer 2. Kidney Failure (End Stage Renal Failure) 3. Primary Pulmonary Arterial Hypertension 4. Multiple Sclerosis 5. Major Organ Transplant 6. Coronary Artery Bypass Graft 7. Aorta Graft Surgery 8. Heart Valve Surgery 9. Stroke 10. Myocardial Infarction (First Heart Attack) 11. Coma 12. Total blindness 13. Paralysis இது போன்ற தருணங்களில் நாம் நமது CPS முதலிட்டில் இருந்து 25% வரை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதற்கு நாம் CPS திட்டத்தில் குறைந்தது 10 வருடம் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மேலும் இது போன்று நாம் 3 முறை நமது CPS முதலிட்டிலிருந்து 25 % மிகாமல் பெற்றுகொள்ள முடியும். ஆனால் குறைந்தது 5 வருட இடைவெளியில். அதே வேளையில் மருத்துவ தேவைக்கு மட்டும் இந்த 5 வருட நிபந்தனை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment