Monday 13 April 2015

இணையதளத்தில் எம்.பார்ம். விண்ணப்பங்கள்:

எம்.பார்ம்., முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தமிழகத்தில் உள்ள அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்.பார்ம்., முதுநிலை இயன்முறை மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 17-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.

இதில் எம்.பார்ம். படிப்புக்கு நுழைவுத் தேர்வு மே 5-ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மே மாதத்துக்குள் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
அரசு கல்லூரிகளில் முதுநிலை இயன்முறை படிப்புகள் இல்லை. எனவே சுயநிதி கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை மே மாதம் நடைபெறும் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விண்ணப்பங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு : www.tn.gov.inwww.tnhealth.org

No comments:

Post a Comment