Monday, 18 May 2015

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விண்ணப்பம்: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 26 லட்சம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் தேவைக்கு ஏற்றவாறு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து துறை சார்பில் ஆண்டுதோறும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் பள்ளிகள் திறந்தவுடனே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாணவர்களின் விவரங்களுடன் பள்ளி நிர்வாகிகள் விண்ணப்பித்தால் உடனுக்குடன் பாஸ் வழங்கிவிடுவோம்.
இணையதள முகவரி
மேலும், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு உட்பட்ட பள்ளி நிர் வாகிகள் http://www.mtcbus.org/ என்ற இணையதளத்தில் விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி செய்துள்ளோம். நேரில் வருவோருக்கு விண்ணப்பங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும்.
    SCHOOL FREE BUS PASS DOWNLOADS
S.NOFILE NAMEDOWNLOAD
1Application FormClick Here
2InstructionClick Here
3Soft Copy FormatClick Here
4Delivery ChallanClick Here

No comments:

Post a Comment