விண்ணப்பம் பெற்ற, 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில், உணவு வழங்கல் துறை சார்பில், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இப்போது, புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டு, 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. அதனால், ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டப்பட்டு,
செல்லத்தக்க காலம், வரும் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புதிய ரேஷன் கார்டு பெற, சென்னையில் உதவி ஆணையர் அலுவலகம், மற்ற மாவட்டங்களில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். உணவு வழங்கல் அதிகாரிகள், விண்ணப்பதாரர் வீட்டில் ஆய்வு செய்தபின், 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும்.
ஆனால், விண்ணப்பித்து, மூன்று மாதங்களாகியும், புதிய ரேஷன் கார்டு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, 'விண்ணப்பம் பெற்ற, 60 நாட்களுக்குள், புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 2 கோடியே 7 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. புதிய ரேஷன் கார்டு கோரி, ஒரு அலுவலகத்தில் தினமும், 50 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு அலுவலகத்திலும், ஆறு ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாத நிலையில், விரைவாக புதிய ரேஷன் கார்டு வழங்குவது சிரமம்.
இருப்பினும், அரசு உத்தரவுக்கு மதிப்பு அளித்து, புதிய கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment