வங்கிகளுக்கு விடுமுறையை அதிகரித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதன்படி ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. இப்போது
அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.ஹெச் வெங்கடாசலம் இதனை வரவேற்றிருக்கிறார். தற்போது அனைத்து சனிக்கிழமையும் காலை 10 முதல் 2 மணி வரை வங்கி செயல்படுகிறது. வரும் செப்டம்பர் முதல் முதல் சனிக்கிழமை மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை முழுமையாக செயல்படும். இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை முழுமையான விடுமுறை ஆகும் என்றார்.
No comments:
Post a Comment