Monday, 24 August 2015

வரும் கல்வியாண்டு முதல் ஒரு முறை தான் 'சிமேட்'

வரும் கல்வி ஆண்டு முதல், முதுநிலை படிப்புகளுக்கான, 'சிமேட்' பொது நுழைவுத்தேர்வு, ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.

       இன்ஜினியரிங் முதுநிலை படிப்பில் சேர, தேசிய அளவில், 'கேட்' தேர்வு; தமிழகத்தில், 'டான்செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல், முதுநிலை எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., போன்ற படிப்புகளுக்கு, 'சிமேட்' எனப்படும், பொது நிர்வாக திறன் தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்வு, ஆண்டுக்கு, இரண்டு முறை நடத்தப்பட்டு வந்தது. வரும் கல்வியாண்டு முதல், ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
'வரும், 2016 - 17ல் மாணவர் சேர்க்கை, 'சிமேட்' தேர்வு, ஜனவரியில் நடத்தப்படும். அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டிய முறை குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும்' என, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment