Wednesday, 12 August 2015

தன்னம்பிக்கையின் தனி அடையாளம் நீ !!!

                          வாழ்க்கையின் உறக்கத்தை பல நாட்களாய் தொலைத்துவிட்டு உறக்கமின்றி சாதிக்க துடிக்கும் இளைய ஆசிரியர் சமுதாயமே. ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் வெற்றி பெற்று  இன்று வேலை வரும் நாளை வேலை வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்களே  உங்கள் கனவை மட்டும் இழந்துவிடாதீர்கள் தொடர்ந்து கனவு காணுங்கள் . நிச்சயமாக ஒரு நாள் கனவு நினைவாகும். தினம் தினம் அருகாமையில் உள்ளவர்கள் , டீ கடையில் இருந்து டிபன் கடைகரர்கள் வரை வேலைக்கு செல்லவில்லையா என கேள்வி கேட்பதும்.
உறவினர்களின் விழாகளுக்கு கூட செல்லமால் மனதிற்குள் புழுங்குவதும். உங்களுக்கு வேலை இல்லை என்பதால் மனப்பெண் முதல்  மனமகன் வரை  மாறுவதும். அனுதினமும் நாம் அனுபவிக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

            தினமும் நம் அருகாமையில் உள்ள ஆசிரியர்கள் வேலைக்கு செல்லும் போது நாமும் இப்படி சென்று  மாணவர்களுக்கு நமது  முழு திறமையையும் வெளிப்படுத்த   மாட்டோமோ  என்ற   எண்ணம்    நம்   அனைவரின்   கண்ணில்

கானல் நீரைய் பெருகிறது. அவை வெளிவருவதில்லை. வயது செல்கிறது .வாலிபம் மறைகிறது என ஒரு தரப்பினர் குமுறல். அவர்களின் குழந்தை வளர்வது போல் நரைமுடியும் வளர்கிறது என்று இன்னும் ஒரு தரப்பினர்.
காலங்கள் கடந்து செல்கிறது மீண்டும் ஒரு வாழ்க்கை வரபோவது இல்லை இருக்கின்ற காலத்தில் எப்படியும்  ஆசிரியர் ஆகிவிடலாம் என்று எண்ணி போராடும் நண்பர்களே  விவேகானந்தர் கூற்றுப்படி நீங்கள் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆவீர்கள்  என்பது உண்மை. நிச்சயம் நடக்கும் .

       போராட்டம் இல்லாமல்  எந்த ஒரு வெற்றியும் நிகழ்ந்தது இல்லை தோல்வி இல்லாத வெற்றி  சரித்திரம் ஆனது இல்லை. இன்று இரவாகலாம் நாளை விடியும். தன்னம்பிக்கையின் தனி அடையாளம் நீ. நம் உள்ளுக்குள் இருக்கும் ஆற்றல் பொறியாய் கிளம்பும் நேரம் இது . வாழ்க்கையில் நீங்கள் எதை இழந்தாலும் இழக்க கூடாதது நமது தன்னம்பிக்கை அதை மட்டும் இழந்துவிடாதீர். போர்களத்தில் போர் வீரனின் வீரம் வெற்றியை வெல்ல அவன் வாள் எடுத்து வீசும் வேகத்தை விட பல மில்லியன் மடங்கு தன்னம்பிக்கை என்ற செங்குருதி ஒவ்வொரு நிமிடமும் நமது உடலில் வெறியாய் ஓட வேண்டும். 


             உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னம்பிக்கை தளிர் விட்டு மரமாகியுள்ளது. வாழ்க்கையின் பாதை குறுகலானது விடை தெரியாத கேள்வி தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்ட உங்களால் தன்னம்பிக்கை தான் நமது தாரக மந்திரம் என்பதை கண்டிப்பாக உணர்ந்துள்ளீர்கள் எனவே விரைவில் நாம் ஆசிரியராக இந்த சமுதாயத்தில் மலர்வோம்....

No comments:

Post a Comment