Wednesday, 10 June 2015

மழலையர் பள்ளிகளுக்கான (PLAYSCHOOL)மாதிரி ஒழுங்குமுறைகளை தொடக்கக் கல்வி இயக்குநரகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.ஜூன் 22 வரை பொதுமக்கள் கருத்துகளை அனுப்பலாம்

மழலையர் பள்ளிகளுக்கான மாதிரி ஒழுங்குமுறைகளை தொடக்கக் கல்வி இயக்குநரகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஜூலை 22-ம் தேதி வரை அனுப்பலாம். 
PLAY SCHOOL DRAFTCODE REGULATION-CLICK HEREமழலையர் பள்ளிகளுக்கு (பிளே ஸ்கூல்) அனுமதி வழங்குவது, புதுப்பித்தல், கட்டிட வசதிகள், பாதுகாப்பு வசதிகள், சேர்க்கை நடைமுறை, பாடத்திட்டம், ஆசிரியர், ஊழியர் நியமனம், அவர்களுக்கான கல்வித்தகுதி, கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு போன்றவை தொடர்பான மாதிரி ஒழுங்குமுறைகளை தொடக்கக் கல்வி இயக்குநரகம் இணையதளத்தில் (www.tn.gov.in/schooleducation) நேற்று வெளியிட்டது. 

அதன்படி, மழலையர் பள்ளிகளில் 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் தொடக்கக் கல்வி பட்டய படிப்பு அல்லது மனையியல் பட்டம், பிஎட் அல்லது குழந்தை நடத்தைகள் தொடர்பான சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். குழந்தையின் வயது ஒன்றரை வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பள்ளியானது குழந்தையின் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூர சுற்றளவுக்குள் அமைந்திருக்க வேண்டும். காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பள்ளி செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்குப் பிறகும் 15 நிமிடம் குழந்தைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். குழந்தைகளை ஒருபோதும் அடிக்கக்கடாது என்பன உள்பட பல்வேறு ஒழுங்குமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தனிநபர்கள், பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தபால் மூலமாக “தொடக்கக் கல்வி இயக்குநர், டிபிஐ வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை 600 006” என்ற முகவரிக்கு ஜூன் மாதம் 22-ம் தேதி வரை அனுப்பலாம். மேலும் மின்னஞ்சல் (deechennai@gmail.com) மூலமாகவும் கருத்துகளை அனுப்பலாம் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment