Wednesday, 10 June 2015

அரசுப் பள்ளிகளுக்கு 'சோலார்' விளக்குகள்

ராமேஸ்வரம் தீவில் உள்ள 22 அரசு பள்ளிக்கு, ஒரு கோடி ரூபாய் செலவில் சோலார் மின் விளக்கு பொருத்தப்பட உள்ளது,” என அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார்.மின்வசதியில்லாத தனுஷ்கோடியில் உள்ள 30 மீனவ குடும்பங்களுக்கு, சோலார் மின் விளக்குகள் மற்றும்சாதனங்கள், ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள்
ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் நேற்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலாமின் சகோதரர் முகமது முத்துமீரா லெப்பை மரைக்காயர், அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், 'இன்டர் நேஷனல் வீ சர்வ் பவுண்டேஷன்' நிர்வாகி டாக்டர் எம்.எஸ். விஜி, 'ஸ்டால் வார்ட் எனர்ஜி' அமைப்பு நிர்வாகி சலீம், ராமேஸ்வரம் ரோட்டரி சங்க தலைவர் முருகன் பங்கேற்றனர்.

பின்னர், விஞ்ஞானி பொன்ராஜ் கூறியதாவது: 'கிரீன் ராமேஸ்வரம்' திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் செலவில், ராமேஸ்வரம் தீவில் உள்ள 22 அரசு பள்ளிகளில் சோலார் மின் உற்பத்தி சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம், 66 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, வகுப்பறையில் உள்ள மின்விசிறிகள், மின் விளக்குகளுக்கு மின்சாரம் வழங்கப்படும். இப்பணி, 2016க்குள் முடிவடையும். இதன் மூலம் 14 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்,” என்றார்.

No comments:

Post a Comment