அண்ணா பல்கலையில், இந்த ஆண்டு, பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பித்துள்ள, 1.54 லட்சம் பேரில், 80 ஆயிரம் பேர், முதல் தலைமுறை பட்டதாரியாக ஆகப்போவதாக குறிப்பிட்டு உள்ளனர்.மொத்த விண்ணப்பதாரர்களில், மாணவர்கள், 95,300 பேர்; மாணவியர், 58,938 பேர்;
இதில், கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில், 1.51 லட்சம் பேர்; தொழிற்கல்வி பிரிவில், 3,104 பேர் இடம்பெற்று உள்ளனர்.
விளையாட்டுப் பிரிவில், 1,472 மாணவர், 595 மாணவியர் என, 2,067 பேர்; மாற்றுத்திறனாளிகளில், 246மாணவர், 102 மாணவியர் என, 348 பேர்; முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினரில், 1,213 மாணவர், 902 மாணவியர் என, 2,115 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இந்த, மூன்று சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளில், 4,530 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில், முன்னாள் ராணுவ வீரர் பிரிவில், 150 இடங்கள்; மாற்றுத்திறனாளிகள், 3 சதவீதம்; விளையாட்டுப் பிரிவினருக்கு, 500 இடங்கள் ஒதுக்கப்படும்.மொத்தமுள்ள விண்ணப்பங்களில், 52 சதவீதம் அளவுக்கு, 80,446 பேர், தங்களை முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகப்போவதாக குறிப்பிட்டு உள்ளனர்; இவர்களில், மாணவர், 52,197 பேர்; மாணவியர், 28,249 பேர்
No comments:
Post a Comment