தமிழகத்தில் உள்ள பல அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் காலி பணியிடம் நிரப்பாமல் உள்ளதால், மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கம்ப்யூட்டர், தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்த வளர்ச்சி மற்றும் பணிகளுக்கு மவுசு அதிகரித்து வருவதால், எந்த பள்ளியிலும் கம்ப்யூட்டர் சார்ந்த
குரூப்களை கைவிடக்கூடாது என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் பலவற்றில், கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடம் காலியாக உள்ளது. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், இப்பணியிடம் நிரப்பப்படவில்லை. கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,'தமிழகத்தில், 169 மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, வேறு ஆசிரியர்களால் பாடம் நடத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. படித்து பயிற்சி பெறும் சிலரும், அரசு நியமனத்தை எதிர்பாராமல், தனியார் பள்ளிகளுக்கு தாவி விடுகின்றனர். ஆடிட்டிங், கலை, வரலாறு, தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு தரும் முக்கியத்துவத்தை, கம்ப்யூட்டர் பிரிவுக்கு தருவதில்லை' என்றனர்.
No comments:
Post a Comment