நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,மத்திய அரசு பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களுககும்
யோகா கட்டாய பாடமாக்கப்படும். யோகா பாடத்தில் 80 மதிப்பெண்கள் செய்முறை தேர்வு மூலம் வழங்கப்படும் என்பதால் மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாது.இதற்கான பாடத்திட்டங்கள் தயாராகி வருவதாகவும் யோகா கலையில் இளங்கலை, முதுகலை,பட்டப்படிப்பு மற்றும் பட்டைய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மாணவர்கள் யோகா செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டு முதல் தேசிய அளவிலான யோகா போட்டி நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.
No comments:
Post a Comment