"டி.இ.டி., தேர்வு குறித்தஅறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்" என துறைவட்டாரங்கள், நேற்றுதெரிவித்தன.பள்ளி கல்வித்துறையில்,20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஇருப்பது குறித்தும்,இந்த இடங்களைபூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி.,
தேர்வு குறித்தஅறிவிப்பு வெளிவராதது குறித்தும்,"தினமலர்" நாளிதழில், நேற்றுமுன்தினம்செய்திவெளியானது.
இதைத்தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்றுஆலோசனைநடத்தினர். ஆசிரியர் காலி இடங்கள் எண்ணிக்கைமற்றும் எப்போதுதேர்வுநடத்தலாம்என்பது உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள்குறித்து, கல்வித்துறைஅதிகாரிகளுடன்,ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "டி.இ.டி., தேர்வு குறித்தஅறிவிப்பு, இன்னும்,10 நாட்களுக்குள் வெளிவரும்" என, தெரிவித்தன.
அறிவிப்பு வெளியானதும், ஒன்றரைமாத இடைவெளிக்குப்பின், தேர்வு நடக்கும்என,தெரிகிறது. எனவே, ஜூன்இறுதியில், தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. "அப்ஜக்டிவ்" முறையிலான விடைகள்என்பதால், மதிப்பீடுசெய்யும் பணிஅனைத்தும்,கம்ப்யூட்டர் மூலமாகவே நடக்கின்றன.எனவே, தேர்வு முடிவை, விரைவாக வெளியிட்டு, ஜூலை இறுதிக்குள், புதியஆசிரியர்களைபணி நியமனம்செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்படும்என, கூறப்படுகிறது.
No comments:
Post a Comment