Wednesday, 24 June 2015

CPS: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: பதிவெண் பெறாதோருக்கு நிதித்துறை சலுகை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துபதிவெண் பெறாதோர் தங்களுக்குரிய பதிவெண்ணைப் பெற ஆகஸ்ட் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக நிதித் துறை செயலாளர் க.சண்முகம், அனைத்துத் துறை செயலாளர்கள், துறைகள், சட்டப் பேரவைச் செயலகம், கருவூலம்- கணக்குத் துறை
உள்பட பல்வேறு துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் கடந்த 2003, ஏப்ரல் 1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைவோருக்கு கருவூலத் துறைமூலம் பதிவெண் வழங்கப்படும்.
இந்த நிலையில், இதில் இணையாதவர்களுக்கும், திட்டத்தில் இணைந்து பதிவெண் பெறாதோருக்கும், வரும் ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளவர்களுக்கு இந்த அறிவுறுத்தல் பொருந்தாது.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ளோர், அவர்களுக்கு பதிவெண் வழங்கப்படுவது குறித்த அறிக்கைகளை கருவூலம்- கணக்குத் துறை இயக்குநர், மாநிலதரவு மைய ஆணையர் ஆகியோர் மாதத்துக்கு இரண்டு முறை அளிக்க வேண்டும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment