கல்வித்துறையில் சட்ட நுணுக்கம்தெரிந்தோர் இல்லாததால் ஏராளமான வழக்குகள்முடிக்கப்படாமல்நிலுவையில் உள்ளன. இதனால் மற்ற பணிகளும்பாதிக்கப்பட்டுள்ளன. க்வித்துறையில் ஆசிரியர்கள்நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு தொடர்பான ஏராளமான வழக்குகள்நீதிமன்றங்களில்நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளை முதன்மைகல்வி அலுவலகம், மாவட்ட கல்விஅலுவலகம்,மாவட்டதொடக்க கல்விஅலுவலகம், மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்அலுவலகத்தில் தனித்தனிஉதவியாளர்கள் கவனிக்கின்றனர்.அவர்களேநீதிமனறங்களுக்கு தாக்கல் செய்யவேண்டியபதில்களைதயாரிக்கின்றனர்.
சட்ட நுணுக்கம் சரியாகதெரியாததால் பதில்களை முறையாக தயாரிப்பதில்லை. இதனால்பலவழக்குகளில்கல்வித்துறைக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ளது. சிலநேரங்களில் பணிச்சுமையால்பதிலை தாக்கல் செய்வதில்லை. இதனால் நீதிமன்றஅவமதிப்புக்கு ஆளாவதோடு, ஏராளமானவழக்குகள் முடிக்கப்படாமல்நிலுவையில் உள்ளன. மேலும் உதவியாளர்கள்அடிக்கடிநீதிமன்றத்திற்கு சென்று விடுவதால் மற்ற பணிகளும்பாதிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment