டெல்லியை சேர்ந்த பள்ளிகளுக்கான பாதுகாப்பு சான்றிதழ்கள் வெறும் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுபடி டெல்லியில் செயல்படும் அனைத்து பள்ளிகளும், அவை இயங்கும் கட்டிடத்திற்கான பாதுகாப்பு சான்றிதழ் பெறுவது கட்டாயம். இதுவரை 800 பள்ளிகள் இந்த சான்றிதழை பெற்றுள்ள நிலையில் 300 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு சான்றிதழ்கள் பணத்திற்கு விற்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு ஆங்கில செய்தி நிறுவனம் மேற்கொண்ட புலனாய்வில், டெல்லி மாநகராட்சியால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு பொறியாளர் வெறும் 3000 ரூபாய்க்கு பாதுகாப்பு சான்றிதழை விற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேரடியாக வந்து கட்டிடத்தை பரிசோதனை செய்யாமல், பள்ளியைப் பற்றிய விவரங்களை மட்டும் கேட்டுவிட்டு சான்றிதழை கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment