Friday 16 October 2015

இ-சேவை மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். உடன் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் ஜே.குமரகுருபரன். படம்: ம.பிரபு


இ-சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க லாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற் றுள்ள கே.அருள்மொழி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங் களில் நடத்தப்படும் இ-சேவை மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணைய வழி விண்ணப்ப சேவைகள் அறிமுகப்படுத்தப்படு கின்றன.

இ-சேவை மையங்களில் ரூ.50 செலுத்தி நிரந்தரப்பதிவு, ரூ.30 செலுத்தி தேர்வுகளுக்கு விண்ணப் பம், ரூ.5 செலுத்தி விண்ணப்பங் களில் மாறுதல்கள், ரூ.20 செலுத்தி விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்ப நகல் பெறு வது உள்ளிட்ட சேவைகளை பெற லாம். மேலும் நிர்ணயிக்கப் பட்ட தேர்வுக்கட்டணத்தையும் செலுத்தலாம். பணம் செலுத்தியதற் கான ஒப்புகைச் சீட்டினையும் பெற்றுக் கொள்ளலாம். மேற்படி சேவைகள் எல்காட் நிறுவனத் தால் நடத்தப்படும் இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும்.

குரூப் 4 தேர்வுகளுக்கான அறிக்கை விரைவில் வெளியிடப் படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து வெளிப்படைத் தன்மையுடன் விண்ணப்பதாரர் நேய அணுகு முறையுடன் இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது தமிழ் நாடு அரசு பணியாளர் தேர் வாணைய செயலாளர் மா.விஜய குமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, இணை இயக்குநர் சரஸ்வதி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் ஜே.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment