Monday 26 January 2015

இன்று 66-வது குடியரசு தினம்.........................

இன்று நாம் இங்கேநமது இந்திய தாய் திருநாட்டின் 66-வது குடியரசு தினவிழாவைகொண்டாடி மகிழஇங்கே கூடி இருக்கும் தருவாயில்... எனதுசிறிய உரையின் மூலம்நம் எண்ணங்களை வரலாற்றின் பொன்னெழுத்தில்பதிந்த... நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூறவிரும்புகின்றேன்!!!  நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றைமுத்தமிட்டவர்கள் ஏராளம்குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம்.குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம்வெள்ளையன் சும்மாகொடுத்தானா சுதந்திரம்?


இல்லை இல்லை பாரதி கண்ணீரில் வடித்த அந்த கவிதை இதோ..

தண்ணீர் விட்டா வளர்த்தோம் - சர்வேசா

இப்பயிரை கண்ணீரால் காத்தோம்....

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழுந்து வெந்திடவும்

நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் கண்டு

தண்ணீர் விட்டா வளர்த்தோம் - சர்வேசா

இப்பயிரை கண்ணீரால் காத்தோம்....”

என்று அந்த சோகத்தை சொல்லும் அவர் கவிதை, நமக்கு சுதந்திரம்கிடைக்க போராடிய நெஞ்சங்களை நம் கண் முன் நிறுத்துகிறது ...!!! 

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே - அதன்

முந்தயர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே - அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே - இதை

வந்தனை கூறி மனதில் இறுத்தி - என்

வாயுற வாழ்த்தேனோ ? இதை

"வந்தே மதரம்வந்தே மதரம்"

என்று வணங்கேனோ ?

 ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் சிறப்பாக கருதப்படும் சில நாட்கள் உள்ளன.  நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசுதின கொண்டாட்டம் அந்த நாட்களில் ஒன்றாகும்.நம் நாடானது 1947-ல் சுதந்திரம் பெற்றாலும் குடியரசானது 1950-ல் தான்ஏனெனில் நாடு சுதந்திரம் அடைந்த போது சிறு சிறு சமஸ்தானங்களாக நாடு சிதறுண்டு கிடந்ததுஅதன் மன்னர்கள் வெறுமனே ஆங்கிலேயர்களின் மாத ஊதியத்தில் காலத்தை ஊதாரியாக கழித்தவர்கள்இவர்களையெல்லாம் மன்னர்   மான்யம் வழங்கி நாட்டை ஒரே இந்தியாவென கொண்டு வந்தபெருமை சர்தார் பட்டேல் அவர்களை சாரும்.  இந்த நாளில்தான் சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு  சட்டம் முதன் முதலில் நடைமுறைக்கு வந்து,  இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயக மற்றும் குடியரசு நாடு 'என பிரகடனம் செய்யப்பட்டது.  

எனவே இந்த நாளில், அனைத்து மாநில தலை நகரங்களிலும், முக்கிய இடங்களிலும்,  மிகவும் ஆடம்பரமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு, குடியரசுதினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  

நாட்டில் தலைவர் எப்படியோ குடிகளும் அப்படி இருப்பார்.. நம்நாட்டின் சிறந்த தலைவராக திகழ்ந்த காமராஜர் அவர்களை இந்ததினத்தில் நினவு கூர்ந்து என் உரையை முடிக்க விழைகிறேன்..

 காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்த்ம்” என ஓங்கி குரல்கொடுத்தார்கள்.   வர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார்.காமராஜர்பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்பவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள்பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.” என்றார் கூட்டம்அமைதியானதுஎல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்எனஆர்வத்துடன் இருந்தனர்.

உழுபவனுக்குநிலம் சொந்தம்’ என நாம் சொல்கிறோம்நெற்கதிரைஅறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் ‘கதிர் அறுப்பவர்களுக்கே நெல்சொந்தம்’ என்றுசொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்றுவிட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?

பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டுபோகிறோம்அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் ‘தனக்கே அரிசிசொந்தம்’ என்று சொல்லிவிட்டால் நெல் உரிமையாளர்கள் நிலைஎன்னவாகும்?

வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும்கடைசியில் சோறுசொந்தம்’ ன்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்?பட்டினிதானேஇந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.

உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலிகேட்க வேண்டும் எனபதுதான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார்காமராஜர் இந்தச் சம்பவம் காமராஜர் முதலமைச்சராகப் பணியாற்றிபோதுசிவகிரியில் நடந்தது ஆகும்.

உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” எனப்து காமராஜரின் கருத்துஆகும்.

நாடு முன்னேற நமது  உழைப்பு தேவை..   

“வரப்பு உயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயர கோல் உயரும்

கொல் உயர கோன் உயர்வான்”

என்ற கூற்றுப்படி நாடு உயரும் எனகூறி, உழைப்பின்  மூலமே நாம்அனைவரும் உயர முடியும் எனக் கூறி இந்த குடியரசு தினத்தில்எல்லோரும் கடுமையை உழைத்து முன்னேற உறுதி ஏற்கவேண்டுமாய் கோரி என் உரையை முடிக்கிறேன்  

நன்றி

வணக்கம்

ஜெய் ஹிந்த்

No comments:

Post a Comment