Wednesday, 10 June 2015

அரசு வேலையில் வயது வரம்பு சலுகை காட்ட முடியாது

அரசு வேலைவாய்ப்பில், வயது வரம்புசலுகை காட்டமுடியாது' என, உயர் நீதிமன்றமதுரைகிளைஉத்தரவிட்டது. தேனி, பெரியகுளம், கெங்குவார்பட்டியைச் சேர்ந்த கனி என்பவர்தாக்கல்செய்த மனு:கனரக வாகனம் ஓட்டஉரிமம் பெற்று, கடந்த,2002ல், தேனிமாவட்டவேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவு செய்தேன்.13ஆண்டுகளாக,எந்தநேர்காணலுக்கும் அழைக்கவில்லை.கடந்த, மே,1ல், மருத்துவப் பணிகள் நியமன தேர்வுவாரியம், டிரைவர் பணிக்குஅறிவிப்பு வெளியிட்டது. அதில், வயதுவரம்பு,35 ஆகநிர்ணயிக்கப்பட்டது. பரிந்துரைக்கப்ப
ட்ட பதிவு மூப்பு பட்டியலில், என்பெயர் இல்லை. ஜூலை,1ம்தேதியை தகுதியாகக்கொண்டு நிர்ணயிக்கப்பட்டவயது வரம்பைவிட,24 நாட்கள்கடந்ததாகக்கூறி, நிராகரித்தனர்.வயது வரம்பை தளர்த்தி, நேர்காணலில் பங்கேற்க அனுமதித்து, பணிநியமனம்வழங்க, கலெக்டர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனருக்குஉத்தரவிடவேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தார்.
இதை விசாரித்து, நீதிபதிஎஸ்.வைத்தியநாதன்பிறப்பித்த உத்தரவு:மனுதாரருக்கு, ஜூலை, 1ம்தேதிநிலவரப்படி,24 நாட்கள் வயது வரம்பு கடந்து விட்டது. மனுதாரருக்கு மட்டும், சலுகைகாட்ட முடியாது. வயது வரம்புஉட்பட, நிர்வாகமுடிவுகளில், தலையிட முடியாது. சலுகைவழங்கினால், மனுதாரர் போல், பாதிக்கப்பட்டுள்ள பலர் சலுகைகோருவர்; மனுதள்ளுபடிசெய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிஉத்தரவிட்டார்.

No comments:

Post a Comment