Tuesday, 2 June 2015

மருத்துவ மாணவர் சேர்க்கை புதிய செயலராக உஷா நியமனம்

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் ஓய்வு பெற்றதையடுத்து, புதிய செயலராக, விழுப்புரம் மருத்துவக் கல்லுாரி 'டீன்' உஷா சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, மருத்துவக்கல்வி இயக்ககம் துவக்கி உள்ளது.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.மாணவர் சேர்க்கை செயலராக பணியாற்றி வந்த, சுகுமார், நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார். இதையடுத்து, புதிய மாணவர் சேர்க்கை செயலராக, விழுப்புரம் மருத்துவக் கல்லுாரி 'டீன்' உஷா சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.தாமதம் செய்தால், மாணவர் சேர்க்கை பணிகளில் சுணக்கம் ஏற்படும் என்பதால், உடனடியாக புதிய செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இன்று பொறுப்பேற்பார் என, தெரிகிறது.* ஸ்டான்லிக்கு புது 'டீன்:' சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், 'டீனாக' பணியாற்றி வந்த கார்குழலி, நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார். இந்த இடத்திற்கும், தாமதமின்றி புதிய, 'டீன்' நியமிக்கப்படுவார் என, தெரிகிறது.

No comments:

Post a Comment