பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் இடையேபாலின வேறுபாடுபிரச்னையைப்போக்க,'ஜென்டர் சாம்பியன்' என்றபுதிய திட்டம்அறிமுகப்படுத்தப்படுகறது. இதற்கானவழிமுறைகளை, அனைத்துக்
கல்விநிறுவனங்களுக்கும், பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
இந்தியாவில், 15 - 24 வயதுக்கு உட்பட்டு, 24 கோடி பேர்இருக்கின்றனர். இது, மக்கள் தொகையில், 20சதவீதம். இந்த இளம்தலைமுறையினரை கல்வி கற்கும் போதே, ஒருங்கிணைத்து,எதிர்காலத்தில், பாலினவேறுபாடு பிரச்னையைக் களைய மத்தியஅரசுமுடிவுசெய்துள்ளது.இதற்காக, 'ஜென்டர்சாம்பியன்' என்ற பெயரில், மாணவ,மாணவியரிடையேகுழு தலைவர்களைஉருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.அனைத்துக்கல்லூரிகள்மற்றும் பள்ளிகளில், 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்பெறும் மாணவ,மாணவியர் தேர்வுசெய்யப்பட்டு, குழுத் தலைவராக நியமிக்கப்படுவர் .இவர்களுக்கு, தனியாகஅடையாள அட்டை, பெயர், 'பேட்ஜ்' போன்றவைவழங்கப்படும். நன்றாக பேச, எழுதமற்றும்மாணவ, மாணவியரிடம்விழிப்புணர்வை ஏற்படுத்திப் பேசும் வகையிலானவர்களையே,இந்த சாம்பியன் பொறுப்புக்கு தேர்வுசெய்ய உள்ளனர்.
இவர்களின் மூலம், பாலினபிரச்னை இல்லாமல், மாணவ, மாணவியர்வேறுபாடு பார்க்காமல்,சமூக, கல்விநல திட்டங்களைநடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. 'ஜென்டர் சாம்பியன்' பொறுப்புக்குவருபவருக்கு பயிற்சி அளிக்க தனியாகஆசிரியர் நியமிக்கப்படஉள்ளனர்.
No comments:
Post a Comment