Sunday, 2 August 2015

5-ம் தேதி எஸ்எஸ்எல்சி அசல் மதிப்பெண் சான்றிதழ்

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 5-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வை எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் பள்ளிகள் மூலம் கடந்த மே 29-ம் தேதி வழங்கப் பட்டது.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை செல்லத்தக்கது ஆகும். இருப்பினும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வெழுதிய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.தனித்தேர்வர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றி தழை அவர்கள் தேர்வெழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment