அகமதாபாத்தைச் சேர்ந்த, ஆசிரியை கிரண் பிர் சேத்தி, சர்வதேச ஆசிரியர் விருதுக்கான இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
துபாயை சேர்ந்த வர்கி அறக்கட்டளை, அனைவரும் கல்வி கற்கும் உரிமையை பெறுதல், சிறந்த ஆசிரியர்களை உருவாக்குதல் உள்ளிட்ட கல்வி சார் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர், பில் கிளிண்டன் கவுரவ தலைவராக உள்ள இந்த அமைப்பு, முதன் முறையாக, 'உலகின் தலை சிறந்த ஆசிரியர் விருது' வழங்க உள்ளது. இதற்காக, 127 நாடுகளை சேர்ந்த, 1,300 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் இருந்து இறுதிச்சுற்றுக்கு, 10 ஆசிரியர், ஆசிரியைகளும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவராக, அகமதாபாத்தில், 'தி ரிவர்சைடு ஸ்கூல்' என்ற பள்ளியை நடத்தி வரும், கிரண் பிர் சேத்தி, தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர்களில் ஒருவருக்கு 6 கோடி ரூபாய் பரிசு கொண்ட, 'உலகின் தலை சிறந்த ஆசிரியர் விருது' வழங்கப்படும். இதற்கான விழா, வரும் மார்ச் 15ம் தேதி, துபாயில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment