Sunday, 1 February 2015

குரூப் 1: முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.


இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:


துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வருமான வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஆகிய பதவிகள் அடங்கிய குரூப் 1 தொகுதிக்கு உள்பட்ட 79 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வில் 70 ஆயிரத்து 547 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர்.

விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி, அந்தப் பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், முதன்மை எழுத்துத் தேர்விற்கு 4 ஆயிரத்து 389 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது.

முதன்மை எழுத்துத் தேர்வு மே 2-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment