10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மொழிபாடங்களுக்கு மட்டும் கோடியிட்ட தாள்கள் (ரூல்டு பேப்பர்) பயன்படுத்த தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசு பொதுத்தேர்வில் மொழிபாடங்களை எழுதும் மாணவர்கள் சிலர் சரியான நேர்கோட்டில் எழுதாததால், விடைத்தாளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த குறைபாடுகளை களையும் பொருட்டு, பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு கோடியிட்ட தாள்கள் (ரூல்டு பேப்பர்) வழங்கினால், சீரமம் குறையும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு, அரசு பொதுத்தேர்வு இயக்குனர் தேவராஜன் இந்தாண்டு முதல் மொழிப்பாடங்களுக்கு மட்டும் கோடியிட்ட தாள்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment