Tuesday, 20 January 2015

பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் 4 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்

பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நான்கு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணி
யமர்த்த மையம், இன்போஸிஸ் பி.பி.எஸ். நிறுவனம் இணைந்து பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் பயின்று நிகழாண்டில் (2015) தேர்ச்சி பெறவுள்ள மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.
வரும் ஜனவரி 27-ஆம் தேதி திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியிலும், 28-ஆம் தேதி ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியிலும், 30-ஆம் தேதி சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியிலும், 31-ஆம் தேதி பெரியார் பல்கலைக்கழக வளாகத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.சி.ஏ., பி.எஸ்சி., ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடத்தை பயின்றிருக்க வேண்டும். தேர்ச்சி விகிதம் 50 சதத்துக்கு மேல் இருக்க வேண்டும். பாடங்கள் ஏதும் நிலுவையில் (அரியர்ஸ்) இருக்கக்கூடாது.
வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.1.5 லட்சம் ஆண்டு சம்பளமாக வழங்கப்படும். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள கல்லூரி மையத்தில் வேலைவாய்ப்பு அலுவலர் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முகாமிற்கு வரும் போது கல்லூரி அடையாள அட்டை, தன் விவரப்பட்டியலை கொண்டு வர வேண்டும்.
இன்போஸிஸ் நிறுவனமுள்ள எந்தப் பகுதியிலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்து கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர், பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்த மைய இயக்குநர் பேராசிரியர் ஆர்.வெங்கடாசலபதியை அலுவலக நேரத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment