Wednesday 25 February 2015

தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர்பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரைகிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி

இயக்குநர் 
பணிக்கான 2,881 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 9.5.2013ல் டிஆர்பி வெளியிட்டது.
இதற்கான தேர்வில் 91 கட் ஆப் மதிப்பெண் பெற்றேன். பிற்பட்டோருக்கான பிரிவில் தமிழ் வழியில் படித்த பெண்களுக்கான ஒதுக்கீட்டில் பட்டதாரி ஆசிரியர் பணி கோரினேன். ஆனால் தமிழ் வழி கல்வி ஒதுக்கீட்டிற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால் பணி வழங்க முடியாது என கூறிவிட்டனர். எனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிசந்திரபாபு, ‘‘தேர்வு நடந்தது, சான்றிதழ் சரிபார்த்தது ஆகியவற்றில் டிஆர்பி தரப்பில் தேதி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று அளித்துள்ளார். தமிழ் வழியில் படிக்கவில்லை என்பதை எதை வைத்து முடிவு செய்தார்கள் எனத் தெரியவில்லை. இதில், எங்கோ தவறு நடந்துள்ளது. மனுதாரரின் விளக்கம் திருப்தி அளிக்கிறது. டிஆர்பி தரப்பு வாதம் ஏற்புடையதல்ல. எனவே மனுதாரருக்கு 12 வாரத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க டிஆர்பி தலைவர் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment