அமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி நகரில் உள்ள ராணுவப் பள்ளியில் 2016-17 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த உண்டு உறைவிடப் பள்ளியில் 2016-2017 ஆம் கல்வியாண்டில் 6, 9-ஆம் வகு ப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தற்போது, சேர்க்கை விண்ணப்பங்கள் பள்ளியில் விநியோகிக்கப்படுகின்றன. விளக்க குறிப்பேடும், விண்ணப்ப படிவமும் பெற விரும்புவர்கள் பொதுப் பிரிவு, படைத் துறையைச் சேர்ந்தவர்கள் ரூ. 650-க்கும், தாழ்த்தப்பட்ட இனத்தவர், பழங்குடி வகுப்பினர் ரூ. 500-க்கும் (இதில் பதிவு கட்டணம், பழைய வினாத்தாள், பள்ளியின் குறுந்தகடு, அஞ்சல் செலவும் அடங்கும்) அமராவதி நகர் ஸ்டேட் வங்கியில் கிளை எண் 2191-இல் பெறத்தக்க வகையில் முதல்வர், சைனிக் பள்ளி அமராவதி நகர் என்ற பெயரில் வரைவோலை (டிடி) எடுத்து அனுப்ப வேண்டும்.வரைவோலையுடன், சுய விலாசமிட்ட கடித உறை ஒன்றும் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பமும், குறிப்பேடும் அக்டோபர் 12 முதல் நவம்பர் 21 ஆம் தேதி வரை வழங்கப்படும்.மேலும்,www.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர்-642102. உடுமலை வட்டம், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 3-01-2016 அன்று நுழைவுத் தேர்வுகள் நடை பெறும்.
No comments:
Post a Comment