Friday, 16 October 2015

தேர்வு முறை சீர்திருத்தம்; சர்வதேச நிபுணர்களின் கருத்தரங்கு

கல்வித்துறை & 'தேர்வு முறை சீர்திருத்தம் &' குறித்து வெளிநாட்டு கல்வியாளர்கள், நிபுணர்கள் பங்கேற்கும் சர்வதேச கருத்தரங்கம் காந்திகிராம பல்கலையில் நடக்க உள்ளது.
இந்தியாவில் தற்போதுள்ள கல்வி முறை மதிப்பெண்களையும், மனப்பாடத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது. இதைமாற்றி மாணவ - மாணவிகளிடம் சிந்திக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். அதற்கு நாட்டிலுள்ள கல்விமுறை, தேர்வு முறைகளை மாற்றியமைக்க வேண்டும்.

அதற்கான முன் முயற்சியாக வரும் நவ., 13, 14ல் காந்திகிராம பல்கலையின் கல்வியியல் துறை சார்பில், &'தேர்வு முறைகளில் சீர்திருத்தம்&' என்ற தலைப்பில் சர்வதேச நிபுணர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடக்க இருக்கிறது. இதில் இந்தியாவிலுள்ள பல்வேறு நாடுகளின் சிறந்த கல்வியாளர்கள், நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்.
கல்வியியல் துறை பேராசிரியர் ஜஹிதாபேகம் கூறியதாவது: ஆண்டுதோறும் தொழில்நுட்பம், கலை அறிவியல் கல்லுாரிகளில் படித்து வெளிவரும் மாணவ - மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால் அவர்களின் சிந்தனை திறன் அதிகரிப்பது இல்லை.
பின்தங்கிய மாணவர்கள், சிறப்பு குழந்தைகள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்விமுறையும், தேர்வு முறையும் உள்ளது. மதிப்பெண்கள், மனப்பாடத் திறனின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இதனால் சிந்திக்கும் திறன் அதிகளவில் குறைந்துள்ளது.
பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியின் தேர்வு முறைகளில் மாற்றங்கள் குறித்த சாத்திய கூறுகளை ஆராயவே இந்த கருத்தரங்கம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்போரின் சிறந்த கருத்துக்கள், அறிக்கையாக தயார் செய்யப்பட்டு, புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மத்திய அமைச்சகத்தில் ஒப்படைக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment