வாக்காளர் பட்டியலில், பெயர்சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரிமாற்றவிண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பத்தின்மீது எடுக்கப்பட்டநடவடிக்கையைஅறிந்து கொள்ள, தேர்தல் கமிஷன், 'ஈசி' என்றதிட்டத்தை அறிமுகப்படுத்திஉள்ளது. தமிழகதலைமை தேர்தல்அதிகாரி சந்தீப்சக்சேனாகூறியதாவது:வாக்காளர் பட்டியலில்உள்ள விவரம்தொடர்பாக, வாக்காளர்கள்பலசேவைகளைபெறுவதற்காக, நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில்,
'ஈசி' என்றதிட்டம்அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டம் மூலம், தமிழகமக்கள், வாக்காளர்பட்டியல் மற்றும்தேர்தல்தொடர்பானசேவைகளை, இணையதளம்உட்பட பலஅணுகுமுறைகளில் பெறலாம். இதை, 'கூகுள் பிளேஸ்டோரில்' இருந்து, ஆண்ட்ராய்டு 'ஆப்ஸ்' மூலம், https:/play.google.com/store/ apps/details?id=com.uniphore. easy -ல் பெறலாம். தமிழக தலைமைதேர்தல்அதிகாரிஇணையதளம் www.elections.tn.gov.in/easy மூலமாகவும் பெறலாம். எஸ்.எம்.எஸ்.,மூலம்அறிய, 94441 23456 என்ற எண்ணுக்கு, 'EPIC epic number டைப் செய்துஅனுப்பவேண்டும்.ஈசிதிட்டம் மூலம், வாக்காளர் பெயர்சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல்,முகவரிமாற்றல், விவரங்களைஉறுதிப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் மீது எடுக்கப்படும்நடவடிக்கை விவரங்களையும், பொதுமக்கள்இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.விண்ணப்ப எண்ணைபதிவு செய்தால்,விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா, இல்லையா; வாக்காளர்பட்டியலில்சேர்க்கப்பட்டுள்ளதா, இல்லையாபோன்ற விவரங்களைஅறிய முடியும். வாக்குச்சாவடிஅலுவலர், கள ஆய்வுக்கு வந்துசென்ற விவரம், வாக்காளருக்கு எஸ்.எம்.எஸ்.,மூலம்தெரியப்படுத்தப்படும். எனவே, வாக்குச்சாவடிஅலுவலர்கள் வீடுகளுக்கு செல்லாமல்,ஏமாற்ற முடியாது.இவ்வாறு சந்தீப்சக்சேனா தெரிவித்தார்.
No comments:
Post a Comment