கோவையில் சமீபத்தில் ‘ஓசை’ அமைப்பின் மாதாந்திர சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கூட்டத்தில் குளங்கள் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்டத்தை நடத்தினார்.
இதுகுறித்து ஆனந்தராஜ் கூறியதாவது:முதன்முதலாக 1996-ல் பொள்ளாச்சி இந்திராகாந்தி வன உயிரின உய்விடம் நடத்திய கானு யிர் கணக்கெடுப்பில் களப்பணிக் குச் சென்றேன்.அப்போதுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கி யத்துவத்தை உணர்ந்தேன்.கோவையில் ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான குளங்கள் இருந்தன. இன்று பல குளங்கள் அழிந்துவிட்டன.
சோழர்கள் காலத்திலேயே நொய்யல் ஆற்றில் தடுப்பணைகளைக் கட்டி, கால்வாய்கள் வெட்டி அதை சுமார் 30 குளங் களுடன் இணைத்தார்கள். நொய் யல் ஆறு ஒவ்வொரு குளமாக நீரை நிரப்பிச் செல்லும். கோடை யில் ஆறு வற்றினாலும் குளங்களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும்.இது ‘சிஸ்டம் டேங்க்’ எனப்படும் மிகச் சிறந்த நீர் மேலாண்மைத் தொழில்நுட்பம். இன்று குளங்களும் அழிந்துவரு கின்றன. இருக்கும் சிற்சில குளங்களிலும் சாக்கடை தேங்கி நிற்கிறது. புளியக்குளம், அம்மன் குளம் ஆகிய மிகப் பெரிய குளங்கள் மண் மேடிட்டு, ஆக்கிர மிக்கப்பட்டு இன்று ஊர்களாகி விட்டன. தமிழகம் முழுவதும் இது போன்ற நிலைதான் இருக்கிறது.பொம்மலாட்டக் கலை 3 ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டது. உலகெங்கும் மக்களிடம் இருந்த இந்தக் கலை, தற்போது அழி யும் நிலையில் இருக்கிறது.இந்தி யாவில் ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இக்கலை சற்று உயிர்ப்புடன் இருக்கிறது. ராஜஸ்தானில் இதற்கென பிரத் தியேகமாக திரை அரங்கம் இருக் கிறது. அங்குதினசரி பொம்ம லாட்டக் காட்சிகள் நடக்கின்றன. தமிழகத்தில் தஞ்சை, மயிலாடு துறை, மதுரை, சென்னையில் சில குடும்பத்தினர் மட்டுமே இக்கலையைநிகழ்த்துகின்றனர். பொருளாதார நசிவால் அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக இதை கைவிட்டு வருகின்றனர்.
நீர்நிலைகள் அழிக்கப்படுவதை தடுக்க, அழியும் பொம்மலாட்டக் கலை மூலமாகவே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். பொம்மலாட்டக் கலையில் பல வகைகள் உள்ளன. அதில், சரம் பொம்மலாட்டக் கலையை (String Puppet) ராஜஸ்தான் சென்று கற்றேன்.நீர்நிலைகள் அழிவைத் தடுப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஊர் ஊராகச்சென்று பல்வேறு பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். ஆறுகளில் கழிவுகள், சாயக் கழிவுகளைக் கலப்பது, மணல் அள்ளி நிலத்தடி நீரைக் கெடுப்பது ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.கோவை மத்திய சிறை தொடங்கி 100-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், ஆதிவாசி கிராமங்கள், நாட்டு நலப்பணித் திட்ட முகாம்களில் இதை நடத்தி வருகிறேன். என்னிடம் இக்கலை யில் 250 மாணவர்கள் முழுமையாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.கட்டணம் பெறாமல்தான் இதை நடத்துகிறேன்.
ஒரு நிகழ்ச்சி நடத்து வதற்கு,கதாபாத்திரங்களை அசைக்க 5 பேர், பின்னணி குரல் கொடுக்க 5 பேர் என குறைந்தது 10 பேர் தேவை. வெளியூருக்கு மாணவர்களை அழைத்துச் செல் வது சிரமம் என்பதால், நான் மட்டுமே செல்வேன். உள்ளூர் நபர்களை தேர்வுசெய்து பயிற்சி அளித்து நிகழ்ச்சியை நடத்து கிறேன். இப்படி ஒவ்வொரு ஊரிலும் பலருக்கு இக்கலையை கற்றுக்கொடுப்பதால், நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பரவுவதோடு, பொம்மலாட்டக் கலையையும் அழிவில் இருந்து தடுக்க முடியும்.இவ்வாறு ஆனந்தராஜ் கூறினார்.
No comments:
Post a Comment