Friday, 9 October 2015

தொடக்க வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு தமிழுக்கு தனிப்பயிற்சி!

மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு, 
தனிப்பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களின் திறனை ஊக்குவிக்கவும், கற்பித்தல் கற்றல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும் பாடவாரியாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆய்வுகளின் மூலம், தமிழ் மொழிப்பாடத்தில், மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்து திறன் பின்தங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதை மேம்படுத்தும் நோக்கத்துடன், ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, 'தமிழ் படித்தல், எழுதுதல் திறன் வளர்த்தல்' என்ற தலைப்பில், ஆசிரியர் களுக்கு தனிப்பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் பாடத்தை நயத்துடன் படித்தல், புள்ளி, கமா போன்ற குறியீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாசித்தல், வாசித்தலில் குறில் நெடில் பயன்பாடு, பிழையின்றி எழுதுவது, வாக்கியங்களை அமைத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியர் களுக்கு அளிக்கப்பட உள்ளன.

இப்பயிற்சிகள், மாவட்ட அளவில், அக்., 12, 13 என, இரு தினங்களிலும், ஒன்றிய அளவில், அக்., 15, 16 என இரு தினங்களிலும் அளிக்கப்படுகின்றன

No comments:

Post a Comment