Tuesday, 28 June 2016

EMIS ENTRY: செய்முறை விளக்கம்

கல்வி துறையில் EMIS Entry செய்தல் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இது மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு செயல்பட்டு வருகிறது.

1)   மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்.

2) மாணவர்களின் விவரங்களை UPDATEசெய்தல், மற்றும் TRANSFERசெய்தல்(Common pool க்கு மாற்றுதல்).

3) Common pool (student pool)ல் உள்ள மாணவர்களின் விவரங்களை தங்களின்        பள்ளிக்கு மாற்றுதல்

மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்:-

முதலில் emis.tnschools.gov.inஎன்ற website க்கு செல்லவும்.Login page க்கு சென்று தங்கள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட User name & Password typeசெய்யவும்.


Webpageல் உள்ள Students categery யை கிளிக் செய்யவும்.

Create child details - யை கிளிக் செய்யவும்.

1.First step TO 4.Fourth step வரை கேட்கப் பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்திச் செய்யவும்.

மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

மாணவர்களின் விவரங்களை UPDATEசெய்தல், மற்றும் TRANSFERசெய்தல் (Commen pool க்கு மாற்றுதல்)

முதலில் emis.tnschools.gov.inஎன்ற website க்கு செல்லவும்.

Login page க்கு சென்று தங்கள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட User name & Password typeசெய்யவும்.

Webpage ல் உள்ள Students categery யை கிளிக் செய்யவும்.

Child details list -கீழ் உள்ள அட்டவணையில் தேவையான வகுப்பு மாணவர் எண்ணிக்கை - யை கிளிக் செய்யவும்.

கொடுக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் இருந்து நாம்UPDATE அல்லது TRANSFERசெய்ய போகும் மாணவனின் பெயரை கிளிக் செய்யவும்.

மாணவனின் Profile openஆகும்.

கடைசியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள UPDATEஅல்லது TRANSFER கிளிக் செய்யவும்.

UPDATE செய்ய - UPDATE டை கிளிக் செய்யவும். ( மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் விடுபட்டு இருந்தாலோ அல்லது தவறாக இருந்தாலோ UPDATEசெய்யவும் ).

சரியான விவரங்களை பூர்த்திச் செய்து Submitசெய்யவும்.

மாணவர்களின் விவரங்கள்UPDATE செய்யப்பட்டுவிட்டது.

TRANSFER செய்ய ( மாணவர்கள் தங்களது பள்ளியை விட்டு இடை நின்றாலோ அல்லது மாற்று சான்றிதழ்( TC) பெற்று வேறு பள்ளிக்குச் சென்றாலோ, இறந்தாலோ TRANSFERசெய்ய வேண்டும்.)

மாணவனின் Profile -கடைசியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளTRANSFER கிளிக் செய்யவும்.

Whether child was Transferred to another school – கீழே கொடுக்கப்பட்டுள்ள Yes யை கிளிக் செய்யவும்.

Date of Transfer(mandatory) –க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பாக்ஸில் மாற்று சான்றிதழ் கொடுக்கப்பட்ட தேதியை டைப் செய்து பின் Submitசெய்யவும்.

தற்போது மாணவனின் விவரங்கள் முறையாகCommon Pool (Student Pool) க்கு மாற்றப்பட்டு விட்டது.
Common pool (student pool ) ல் உள்ள மாணவர்களின் விவரங்களை தங்களின் பள்ளிக்கு மாற்றுதல் :-
முதலில் emis.tnschools.gov.inஎன்ற website க்கு செல்லவும்.Login page க்கு சென்று தங்கள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட User name & Password typeசெய்யவும்.Webpage ல் உள்ள Students categery யை கிளிக் செய்யவும்.Student Pool – லை கிளிக் செய்யவும்.
District name , Block name, School name , Class Last studiedஆகியவற்றை சரியாக பூர்த்திச் செய்த பின் Submitசெய்யவும்.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் இருந்து தங்களுக்கு தேவையான மாணவரின் பெயரை க்ளிக் செய்யவும்.
மாணவனின் Profile -கடைசியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளTRANSFER கிளிக் செய்யவும்
.Unique id no :- , Class studyingடைப் செய்து பின் Admit  டை க்ளிக் செய்யவும்.
மாணவரின் விவரங்கள் தங்கள் பள்ளிக்கு மாற்றப் பட்டுவிட்டது.பின்பு மேல்பகுதியில் வலது புறம் உள்ள UDISE no ரை க்ளிக் செய்து Logoutகொடுத்து வெளியே வரவும்.

No comments:

Post a Comment