தமிழகத்தில், தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. ஆனால் இதுவரை இந்த ஆண்டுக்கானகல்விக் கட்டணம் பற்றி கல்விக் கட்டண சீரமைப்புக் குழுவிடம் இருந்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதனை பயன்படுத்திக் கொண்டு, பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.வசூலிக்கும் கட்டணத்திற்கு உரிய ரசீதுகள் வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநருக்கு எழுத்துபூர்வமாக புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தனர். அதன் பேரில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர்கள் கூறினார்.
No comments:
Post a Comment