Monday, 20 June 2016

CCE-ல் 4 பதிவேடுகள் மட்டுமே

தொடர் & முழுமையான மதிப்பீட்டு முறைக்காகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறையால் உறுதியாக இறுதி செய்யப்பட்டவை 4 பதிவேடுகள் மட்டுமே.

1. *மாணவர் திரள் பதிவேடு*
2. *பாட ஆசிரியர் பதிவேடு*
3. *கல்வியிணைச் செயல்பாடுகள் பதிவேடு*
4. *வகுப்பு ஆசிரியர் (தொகுப்பு மதிப்பெண்) பதிவேடு*
இதில், மாணவர் திரள் பதிவேடு என்பது தனித்த அட்டைகள் ஆகும். இதுவே பழைய முறையின்படியான மதிப்பெண் அட்டை (Rank Card). இதை ஒவ்வொரு பருவ முடிவிலும் பெற்றோரின் பார்வைக்குக் கொடுத்தனுப்பி கையொப்பம் பெற்று வைத்துக் கொள்ளவும். பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றுச் செல்லும் மாணவரிடம் மாற்றுச் சான்றிதழுடன் இதன் நகலையும் வழங்கிட வேண்டும்.
*I Can! I Did! பதிவேடு* மாணவர்களுக்கானது. அவர்களின் பாடப் புத்தகங்களிலேயே இதற்கான படிவம் தரப்பட்டுவிட்டது.
இதைவிடுத்து, அச்சக உரிமையாளரும், பதிவேடுகள் விற்பனையாளரும் இலாப நோக்கில் விற்பனை செய்யும் வீணான பதிவேடுகளை வாங்கிக் குவிப்பதை ஆசிரியப் பெருமக்கள் இனியாயினும் தவிர்த்திடவும்.
இந்நான்கு பதிவேடுகளின் மாதிரி இத்துடன் பகிரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment